Today’s Live: ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்..! முதல்வர் அறிவிப்பு..!

முதல்வர் நிதியுதவி:
புதுக்கோட்டை மாவட்டம் சீமானூர் கிராமத்தில் 23ம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி மாவட்டம், இச்சிக்காமாலைப்பட்டியைச் சேர்ந்த ஜெயந்த் என்கின்ற மாடுபிடி வீரர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.#Dinasuvadu | #MKStalin | #DMK | #Pudukottai | #jallikattu pic.twitter.com/tjwQnVEwMn
— Dinasuvadu (@Dinasuvadu) April 27, 2023
27.04.2023 5:15 PM
அமலாக்கத்துறை சோதனை :
அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக, சென்னையில் கடந்த 24ம் தேதி தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மின்வாரிய அதிகாரிகளின் வீடுகளில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையில் ரூ.360 கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
27.04.2023 4:15 PM
சிவகங்கை ஜல்லிக்கட்டு:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் பகுதியில் சித்திரை திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில், காளை முட்டியதில் காரைக்குடியை சேர்ந்த பாண்டி, மங்களாம்பட்டியை சேர்ந்த முருகன் ஆகியோர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
27.04.2023 3:45 PM
மருத்துவமனையில் தீ விபத்து:
சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் மேல் தளத்தில் உள்ள கேன்டீனில், கேஸ் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீவிபத்து குறித்து தகவலறிந்து விரைந்த தீயணைப்பு படை வீரர்கள், தீயை மேலும் பரவாமல் தடுத்தனர். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
27.04.2023 2:15 PM
மைனர் சிறுமி பாலியல் விவகாரம்:
மேற்கு வங்காளத்தில் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் கலியகஞ்சில் மெக்கிலிகுங்கே போலீஸார் நடத்திய விசாரணையின் விரிவான அறிக்கையை கொல்கத்தா உயர் நீதிமன்றம் கோரியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 2ம் தேதி நடைபெறவுள்ளது.
27.04.2023 1:45 PM
பிரதமர் மோடி பிரச்சாரம்:
வரும் 29 ஆம் தேதி கர்நாடகா வரும் பிரதமர் மோடி 6 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார். 29,30 ஆகிய தினங்களில் பீதர், பெலகாவி, கோலார், ஹாசன் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். மே 2, 3 ஆம் தேதிகளில் விஜயநகர். மங்களூரு, பெலகாவியில் பிரச்சாரம் செய்கிறார். மேலும் 6, 7 ஆகிய தேதிகளில் மைசூரு. பெங்களூருவில் பிரச்சாரம் செய்ய உள்ளார். பிரதமர் வருகையையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
27.04.2023 1:10 PM
அமித்ஷா மீது வழக்கு:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது கர்நாடகாவில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம் வெடிக்கும் என அமித்ஷா கூறியதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவக்குமார் மற்றும் பரமேஷ்வர் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அமித்ஷா தனது பேச்சுகளால் வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
27.04.2023 12:35 PM
மு.க.ஸ்டாலின் உத்தரவு:
அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் சரியான நேரத்தில் தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். விழுப்புரத்தில் கள ஆய்வில் ஈடுபட்ட அவர், ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளோடு பேசினார். அப்போது பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் திட்டங்களில் கால தாமதம் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
27.04.2023 12:15 PM
ராம நவமி வன்முறை :
ஹவுரா மற்றும் தல்கோலா மாவட்டங்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளில் ராம நவமியின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான விசாரணையை என்ஐஏ-க்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது.
27.04.2023 11:50 AM
கச்சேரி வீதிக்கு ஈவெரா பெயர்:
ஈரோடு கச்சேரி வீதிக்கு மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெரியாரின் கொள்ளுப் பேரனும் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா, ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது அவரை கௌரவிக்கும் விதமாக தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இறக்கும்போது அவர் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தார்.
27.04.2023 11:30 AM
கல்லூரி சேர்க்கை விண்ணப்பம்:
தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கைக்கு மே 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் விண்ணப்ப விநியோகம் தொடங்க இருக்கிறது. மருத்துவம் படிக்க நீட் தேர்வுகள் மே 7ம் தேதி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
27.04.2023 11:05 AM
இபிஎஸ் பேட்டி :
அதிமுக, அண்ணாமலை இடையே வெளிப்படையாக வார்த்தை மோதல் இருந்த நிலையில், “தங்களுக்கும், அண்ணாமலைக்கும் எந்தவித தகராறும் கிடையாது” என அமித்ஷாவை சந்தித்த பின் இபிஎஸ் கூறியுள்ளார். அண்ணாமலை குறித்து தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என முன்னதாக இபிஎஸ் கூறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “சிலர் திட்டமிட்டே பாஜக மற்றும் அதிமுகவை பிரிக்கும் நோக்கில் கேள்வி கேட்டதால் அப்படி கூறினேன்” என இபிஎஸ் கூறியுள்ளார்.
27.04.2023 10:35 AM