அதிர்ச்சி ரிப்போர்ட்.! காய்ச்சல் பிபி-க்கான 48 மருந்துகள் தரமற்றவை.! மத்திய அரசு தகவல்.!

Tablets

மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் காய்ச்சல் மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் குறித்த மருந்துகளில் 48 மருந்துகள் தரமற்றவை என தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய அரசு மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியமானது அவ்வப்போது, இந்தியாவில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் பல்வேறு மருந்து வகைகளை ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறது. அதன் விவரங்களையும் அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் மட்டும் 1,497 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகி சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், காய்ச்சல், உயர் ரத்த அழுத்தமான BP பிரச்சனைகள், கால்சியம், இரும்பு சத்துக்கள், அஜீரண கோளாறுகள் உள்ளிட்டவை குறித்த மருந்துகளில் 48 மருந்துகள் தரமற்றவை என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

மேற்கண்ட 48 மருந்துகளில் பெரும்பாலான மருந்து நிறுவனங்கள் இமாச்சல், உத்தரகாண்ட், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வந்தவை என கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. தரமற்ற மருந்துகளை தயார் செய்த மருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்