காவேரி – குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் தண்ணீர் வீணாகி இருக்காது.! அன்புமணி ராமதாஸ் பேட்டி.!

காவேரி – குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் இந்நேரம் தென் மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைத்து இருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காவேரி – தெற்கு வெள்ளாறு மற்றும் வைகை – குண்டாறு இணைப்பு திட்டமானது கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது 2008ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு 2009 இல் பணிகள் துவங்கிப்பட்டது. அதன் பிறகு அதிமுக ஆட்சி காலத்தில், 2020இல் இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் துவங்கப்பட்டது.
தற்போது இந்த திட்டம்குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். காவேரி குண்டாறு திட்டத்தை முன்னரே நிறைவேற்றி இருந்தால் இந்நேரம் காவேரியில் இருந்து வெளியேறும் நீர் தென் மாவட்டங்களுக்கு திருப்ப்பிவிட பட்டு இருக்கும் என தெரிவித்தார்.
அதாவது, காவேரியில் இருந்து இறுதியாக வெளியேறும் நீர் கடலில் கலக்கின்றது. அப்படி 620 டிஎம்சி தண்ணீர் கலப்பதாக அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார். இந்நேரம் காவேரி – குண்டாறு திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் 30 முதல் 40 டிஎம்சி தண்ணீர் அளவு தென்மாவட்டங்களான புதுக்கோட்டை, விருதுநகர், கரூர், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைத்து இருக்கும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.