தொடையில் காயம்…’ஐ.பி.எல்.’ தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர்.!!

Washington Sundar SRH

காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். 

ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமான ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக  ஹைதராபாத் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி சனிக்கிழமையன்று டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெரும் அடியை சந்தித்துள்ளது. இதனையடுத்து. ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் 2023ல் இருந்து விலகியுள்ளார். இவர், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுந்தர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Washington Sundar
Washington Sundar [Image Source : IPL WEBSITE]
பந்து வீச்சில் 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். மற்றும் 24 ரன்களையும் பதிவு செய்தார். எனவே, கண்டிப்பாக அவர் இல்லாமல் போட்டிகளில் விளையாடுவது ஹைதராபாத் அணிக்கு சிரமமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், நடப்பு சீசனில் வாஷிங்டன் சுந்தர் 7  போட்டிகளில் விளையாடினார். மொத்தமாக  3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  மறுபுறம், அவர் பேட்டிங்கில் 60 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 24 மற்றும் சராசரியாக 15 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்