மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.! முதல்வர் அறிவுறுத்தல்.!

MK Stalin

மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

கள ஆய்வில் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் நல திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த கள ஆய்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரத்தில் உரையாற்றினார். அப்போது அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

முதலவர் பேசுகையில், அனைத்து பணிகளும் விரைவாகவும், தரமானதாகவும் நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றும், தொடர்ச்சியான கண்காணிப்பு இருந்தால் எந்த திட்டமும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு விடும் என்றும் அதனால் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், அரசு பணிகளுக்கு வருபவர்களுக்கு தாமதமனின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்றும், சுகாதாரம், இருப்பிடம் உள்ளிட்ட மக்களின் அன்றாட தேவைகளை விரைவாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். வேளாண் துறையில் வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஒரு திட்டம் நிறைவேற பல்வேறு துறைகளின் துணை தேவைப்படுகிறது. என்று குறிப்பிட்டார்.

இன்று 3 மாவட்டங்கள் ஆய்வு செய்யபட்டன இதில் அனைத்தும் விவசாய மாவட்டங்கள். அங்கு விவசாயிகளின் மேம்பாடு மிக முக்கியம். விவசாய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி உரிய வகையில் செலவு செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆராய வேண்டும். வங்கி கடன், வேலைவாய்ப்பு திட்டங்களை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருசேர கூட்டாக ஆலோசிக்க வேண்டும் அப்போது தான் மற்ற துறைகளின் செயல்பாடு தெரிய வரும் என விழுப்புரத்தில் 3 மாவட்ட கள ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு முதல்வர் அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்