இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,533- பேருக்கு கொரோனா.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11,047 பேர் குணமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,43,47,024 ஆக அதிகரித்துளது. கொரோனா பாதிப்புக்கு மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.49 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு உயர்ந்துவருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைளை பொதுமக்கள்கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025