மின்சாரத்தை மிச்சப்படுத்த அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றிய பஞ்சாப் முதல்வர்…!

மின்சாரத்தை மிச்சப்படுத்த அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை பஞ்சாப் முதல்வர் மாற்றியுள்ளார்.
பொதுவாகவே கோடை காலங்களில் மின்சாரத்தின் தேவை அதிகரிப்பது வழக்கமானதுதான். பல இடங்களில் மின்தடையும் ஏற்படுவதுண்டு. கோடைகாலலங்களில் நண்பகலில் மின்நுகர்வு உச்சத்தை எட்டுவதுண்டு. கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய இந்த சிக்கலை எதிர்கொள்வதற்காக அரசு அலுவலகங்களில் மின்சாரத்தை சேமிக்கும் வண்ணம் பஞ்சாப் முதல்வர் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார்.
அதன்படி காலையில் முன்கூட்டியே அரசு அலுவலகங்கள் திறந்து மின் நுகர்வு உச்சத்தை எட்டும் நண்பகல் வேளையில் பணியை முடிப்பதற்காக புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். அதன்படி காலை 7:30 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் செயல்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, இன்று காலை 7:30 மணிக்கு அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தனது அலுவலகத்தில் வந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். ஜூலை 15ஆம் தேதி வரை இந்த பரிசோதனை முயற்சி தொடரும் என்றும், அவசியம் என்றால் மேலும் மிக நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.