கோலி மற்றும் கம்பீரை தடை செய்ய பிசிசிஐ முடிவு செய்தால் – சேவாக் வேதனை

Virender Sehwag

விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் தேசத்தின் சின்னங்கள் இருவரும் களத்தில் தங்கள் நடத்தையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என வீரேந்திர சேவாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது விராட் கோலி நவீன்-உல்-ஹக்குடன் மற்றும் கவுதம் கம்பீர் இருவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்,இதனால் முவருக்கும் பிசிசிஐ 100% அபராதம் விதித்தது  .

சேவாக்கின் கருத்து :

இந்திய அணியின் முன்னாள்  தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் இது குறித்து கூறுகையில்,விராட் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் தேசத்தில் மிகவும் பிரபலமான பெயர்கள் என்றும், அவர்களின் செயல்களை மில்லியன் கணக்கான குழந்தைகள் பின் தொடர்கிறார்கள், களத்தில் தங்கள் நடத்தையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

“போட்டி முடிந்ததும் நான் டிவியை அணைத்துவிட்டேன். போட்டிக்குப் பிறகு என்ன நடந்தது என்பது பற்றி எனக்குத் தெரியாது. மறுநாள் நான் கண்விழித்தபோது சமூக வலைதளங்களில் பல குழப்பங்களைப் பார்த்தேன். நடந்தது சரியல்ல. தோற்றவர் அமைதியாக தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டும், வெற்றி பெற்ற அணி கொண்டாட வேண்டும். அவர்கள் ஏன் ஒருவருக்கொருவர் ஏதாவது சொல்ல வேண்டும், ”என்று சேவாக் கிரிக்பஸிடம்( Cricbuzz) கூறினார்.

எதிர்கால சந்ததியினரை பாதிக்கும்:

“நான் எப்போதும் ஒன்றைச் சொல்வேன், இவர்கள் நாட்டின் சின்னங்கள். அவர்கள் ஏதாவது செய்தால் அல்லது சொன்னால், மில்லியன் கணக்கான குழந்தைகள் அவர்களைப் பின்தொடர்கிறார்கள்,இவர்களின் செயலால் ‘நான் விரும்பும் ஒருவர்  இதைச் செய்திருந்தால், நானும் செய்வேன்’ என்று நினைக்கலாம்.

எனவே அவர்கள் இந்த விஷயங்களை மனதில் வைத்திருந்தால், அவர்கள் இதுபோன்ற சம்பவங்களை மட்டுப்படுத்துவார்கள்,அவர்களின் இந்த  களத்தில் நடக்கும் சண்டைகள் எதிர்கால சந்ததியினரை நன்றாகப் பிரதிபலிக்காது என்றும் சேவாக் கூறினார்.

பிசிசிஐ தடை செய்யலாம் :

எல்லை மீறும் வீரர்களைத் தடை செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க பிசிசிஐ வலியுறுத்தலாம்.பிசிசிஐ யாரையும் தடை செய்ய முடிவு செய்தால், இதுபோன்ற சம்பவங்கள் அரிதாகவே நடக்கும் அல்லது நடக்காமல் போகலாம்.

இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் பல முறை நடந்துள்ளன, எனவே டிரஸ்ஸிங் அறைக்குள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வது நல்லது,“நீங்கள் மைதானத்தில்  இருக்கும் போது, இந்த விஷயங்கள் அழகாக இல்லை,

குழந்தைகளை பாதிக்கும்:

என் சொந்தக் குழந்தைகள் உங்கள் உதட்டு அசைவை படிக்க கூடியவர்கள், பென் ஸ்டோக்ஸ்  பேசுவதை அவர்கள் நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். அதனால் நான் இந்த செயலை  மோசமாக உணர்கிறேன்.

நீங்கள் இதுபோன்ற விஷயங்களைச் சொன்னால், என் குழந்தைகளால் அதைப் படிக்க முடிந்தால், மற்றவர்களும் படிக்கலாம், நாளை அவர்களும் அதைச் சொல்ல முடியும் என்றே கருதுவார்கள்” என்று தனது வேதனையை சேவாக் கிரிக்பஸிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்