பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது – ஐகோர்ட் உத்தரவு

மாநில பஞ்சாயத்து சட்டப்படி பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது என உயர்நீதிமன்றம் ஆணை.
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி, பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளுர் நொச்சிலி கிராமத்தில் இறந்தவரின் உடலை பட்டா நிலத்தில் புதைத்தை எதிர்த்து பாபு என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
புதைக்கப்பட்டவரின் உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தாலும் பஞ்சாயத்து சட்டப்படி பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.