இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..! 10 பேர் பலி..50க்கும் மேற்பட்டோர் காயம்..!

KarnatakabusAccident

கர்நாடகாவில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஷிமோகா தாலுக்காவில் உள்ள சோரடி என்ற இடத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில், பலர் பேருந்தில் சிக்கிக் கொண்டுள்ளனர், அவர்களை மீட்கும் பணி தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

10 உயிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதனால் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மேலும் போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். இச்சம்பவத்தால், நெடுஞ்சாலை முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்