#KarnatakaElectionResults : ‘காங்கிரஸ்’ 113 இடங்களை தாண்டி முன்னிலை…!!

காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் 10-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி, தேர்தல் ஆணையம் தகவலின்படி, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான பாதி இடங்களையும் தாண்டி அதாவது 113 இடங்களையும் தாண்டி முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக பாஜக 73 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்றும் ஜேடி(எஸ்) 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.