காங்கிரஸ் முன்னிலை…சென்னையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய தொண்டர்கள்.!!

KarnatakaPolls

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும்நிலையில், சென்னையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

கடந்த மே 10-ஆம் தேதி கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கப்பட்டு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. 

காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான பாதி இடங்களையும் தாண்டி அதாவது 119 இடங்களில்  முன்னிலை வகிக்கிறது.  எனவே, காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பதால் சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள். 

அப்பகுதியில் செல்லும் பேருந்துகளில் இருக்கும் பொதுமக்களுக்கு லட்டுகள, இனிப்புகள்  வழங்கி கையில் காங்கிரஸ் கொடியுடன் கொண்டாடி வருகிறார்கள். மேலும், காங்கிரஸ் 119 இடங்களிலும், பாஜக 72 இடங்களிலும், ஜேடிஎஸ் 25 இடங்களிலும் முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்