புற்றுநோய் விழிப்புணர்வு…புதிய ஜெர்சிக்கு மறிய ‘குஜராத் டைட்டன்ஸ்’ அணி.!!

Gujarat Titans

புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘குஜராத் டைட்டன்ஸ்’  அணி தனது ஜெர்சி கலரை மாற்றியுள்ளது. 

நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்  குஜராத் டைட்டன்ஸ் (நாளை) திங்களன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இன் கடைசி ஹோம் லீக் ஆட்டத்தில் லாவெண்டர் ஜெர்சியை அணிந்து விளையாடுகிறது.

இதற்கான ஜெர்சியை தங்கள் வீரர்கள் அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி “புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஜெர்சியை நங்கள் அணிந்துள்ளோம்” என கூறியுள்ளனர்.

மேலும், கடைசியாக குஜராத் மும்பை அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்