நாமக்கல்லில் பரபரப்பு.! வடமாநில தொழிலாளர்கள் குடிசைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.! போலீஸ் தேடுதல் வேட்டை.!

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமானோர் தங்கி சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர். ஜேடர்பாளையத்தில் நேற்று இரவு வடமாநில தங்கியிருந்த குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.
மண்ணெண்ணெய் அடங்கிய குப்பிகளை ஏறிந்து அதன் மூலம் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோவை சரக டிஜிஜி 8 தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 3 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 தொழிலாளர்கள் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025