Breaking : கள்ளச்சாராயம் விற்போர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை ..! முதல்வர் அதிரடி உத்தரவு..!

M. K. Stalin

போதைப்பொருட்கள் விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதல்வர்  உத்தரவு 

கள்ள சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை மற்றும் மதுவிலக்கு துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் கள்ள சாராயத்தை தடுக்க மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்றும், கள்ள சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கள்ள சாராயம், போதைப்பொருட்கள் விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறப்பாக செயல்படும் உயர் அதிகாரிகளே மதுவிலக்கு அமலாக்க பிரிவில் நியமிக்க வேண்டும் என்றும், தொழிற்சாலைகளில் எரி சாராயம், மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும் என்றும், மெத்தனாலை விஷ சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கு குறித்து தகவல் அளிக்க 10581 என்ற எண் பயன்பாட்டில் உள்ளதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வாட்சப் எண்ணை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். வாட்ஸ் அப் மூலம் பெறும் புகார்களை கண்காணித்து எடுக்கும் தொடர் நடவடிக்கைகள் குறித்து உறுதி செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து திங்கட்கிழமை தோறும் முதல்வரின் அலுவலகத்திற்கு அறிக்கை தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்