Today’s Live: சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!

LIVE NEWS

பட்டாசு ஆலை வெடி விபத்து:

சிவகாசி ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்த குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கவலைக்கிடமான நிலையில் இருளாயி என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக ஆலை மேற்பார்வையாளரை கைது செய்த போலீசார் ஆலையின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

18.05.2023 4:10 PM

விஷச் சாராய விவகாரம்:

விஷச் சாராய விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக பேரணி நடத்துகிறது. மே 22 காலை 10:30 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் இந்த பேரணி நடைபெற உள்ளது. தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் மனு அளிக்கவும் அதிமுக முடிவு செய்துள்ளது.

ADMK Report
ADMK Report

18.05.2023 1:10 PM

கர்நாடக முதல்வர்:

காங்கிரஸ் தலைமை கர்நாடக முதல்வராக சித்தராமையாவை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

18.05.2023 12:10 PM

ஜல்லிக்கட்டு தீர்ப்பு:

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நபர் அமர்வு தெரிவித்துள்ளது.

18.05.2023 11:24 AM

செயற்குழு கூட்டம்:

பாஜக மாநில செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது. கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கூடும் இந்த கூட்டத்தில், பாஜக முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வது பற்றி ஆலோசனை நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

18.05.2023 11:05 AM

வெடிவிபத்து:

மேற்கு வங்காளத்தில் எக்ரா பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். தற்போது கட்டாக்கில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் குற்றவாளி பானு பாக் மற்றும் அவரது மகன் மற்றும் மருமகன் ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18.05.2023 10:50 AM

ரத்தன் லால் கட்டாரியா மரணம்:

ஹரியானா மாநிலம் அம்பாலா மக்களவை தொகுதி பாஜக எம்.பி. ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இப்பொது அவருக்கு, மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

18.05.2023 9:35 AM

ஐபிஎல் டிக்கெட் விற்பனை:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள, பிளே ஆஃப் போட்டிகளுக்கான, டிக்கெட் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு ஆன்லைனில் தொடங்க உள்ளது. மே 23,24 ஆகிய தேதிகளில் 2 போட்டிகள் நடக்க உள்ளது.

18.05.2023 9:35 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts