கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த விராட் கோலி.!!

crish gayle and Virat Kohli

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் 6 சதங்கள் அடித்த வீரர் கிறிஸ் கெயில் சாதனையை  முந்தி கோலி தனது 7-வது  ஐபிஎல் சதத்தை அடித்தார். நேற்று குஜராத் அணிக்கு  எதிராக விராட்கோலி 60 பந்துகளில் அதிரடியாக விளையாடி சதத்தை எட்டினார். இது அவருக்கு இந்த சீசனில் இரண்டாவது சதமும் கூட.

இதன் மூலம் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்த முதல் பெங்களூர் வீரரும் இவர் தான். மேலும், கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி இருந்தார். அதனை தொடர்ந்து நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் சதம் எடுத்தார்.

இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிகம் சதம் அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு 6 சதங்கள் எடுத்து கிறிஸ் கெய்ல் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், தற்போது 7 சதங்கள் அடித்து விராட் கோலி இந்த சாதனையை முறியடைத்துள்ளார்.

மேலும், நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான இந்த போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்