கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த விராட் கோலி.!!

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 6 சதங்கள் அடித்த வீரர் கிறிஸ் கெயில் சாதனையை முந்தி கோலி தனது 7-வது ஐபிஎல் சதத்தை அடித்தார். நேற்று குஜராத் அணிக்கு எதிராக விராட்கோலி 60 பந்துகளில் அதிரடியாக விளையாடி சதத்தை எட்டினார். இது அவருக்கு இந்த சீசனில் இரண்டாவது சதமும் கூட.
இதன் மூலம் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்த முதல் பெங்களூர் வீரரும் இவர் தான். மேலும், கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி இருந்தார். அதனை தொடர்ந்து நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் சதம் எடுத்தார்.
இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிகம் சதம் அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு 6 சதங்கள் எடுத்து கிறிஸ் கெய்ல் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், தற்போது 7 சதங்கள் அடித்து விராட் கோலி இந்த சாதனையை முறியடைத்துள்ளார்.
மேலும், நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான இந்த போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025