கார் நிலைத்தடுமாறி எதிரே அடுத்தடுத்து வந்த 2 சரக்கு வாகனங்கள் மீது மோதி விபத்து…10 பேர் படுகாயம்.!!

வந்தவாசியில் கார் ஒன்று நிலைத்தடுமாறி எதிரே அடுத்து அடுத்து வந்த 2 சரக்கு வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தாழம்பள்ளம் கிராம கூட்டு சாலையில், அதிவேகமாக சென்ற கார் ஒன்று நிலைத்தடுமாறி எதிரே அடுத்து அடுத்து வந்த 2 சரக்கு வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த 6 பேரும் காரில் பயணம் செய்த 4 பேர் என மொத்தமாக 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் சிகிச்சையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025