ஐபிஎல்-இல் மிரட்டிய CSK இளம் வீரர் பத்திரனா.! இலங்கை அணி கொடுத்த மிக பெரிய வாய்ப்பு.!

Matheesha Pathirana

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் மதிஷ பத்திரனா இலங்கை அணிக்கான ஒருநாள் அணியில் அறிமுகமாகவுள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய இளம் பந்துவீச்சாளராக, கேப்டன் தோனியின் ‘குட்புக்’கில் இடம் பெற்றுள்ள இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் பத்திரனாவுக்கு இலங்கை அணி பெரிய வாய்ப்பை அளித்துள்ளது.

20 வயதான இளம் பந்துவீச்சாளர் மதீஷ பத்திரனாவை இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்த்துள்ளது இதன் மூலம் ஒருநாள் தொடரில் புதிரானா முதன் முதலாக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிகள் ஜூன் 2, 4 மற்றும் 7 ஆம் தேதிகளில் இலங்கையில் நடைபெற உள்ளது. ஏற்கனவே அவர் இலங்கை அணிக்காக 2 சர்வதேச டி20 போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தார்.  நடந்து முடித்த ஐபிஎல் போட்டியில் மதிஷ பத்திரனா 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்