விபத்து நடந்த பகுதிக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வருகை.!

ஒடிசா ரயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வருகை.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவின் பாஹனகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.20 மணி அளவில் விபத்துக்குள்ளானது. தற்போது, இந்த கோர விபத்தில் 233 பேர் உயிரிழந்ததாகவும், 900-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது, விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அமைச்சர் ரயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வருகை தருகிறார். ஏற்கனவே, ஒடிசா ரயில் விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட விசாரணை நடைபெறும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், ரயில் விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க புவனேஸ்வர், கொல்கத்தாவில் இருந்து தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் அழைக்கப்பட்டுள்ளன மற்றும் இந்திய விமானப்படையும் இணைகிறது.
இதற்கிடையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ஒடிசா ரயில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Ex-gratia compensation to the victims of this unfortunate train accident in Odisha;
₹10 Lakh in case of death,
₹2 Lakh towards grievous and ₹50,000 for minor injuries.— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 2, 2023