ஒடிசா ரயில் கோர விபத்து… சேதப்பகுதிகளை விளக்கும் டிரோன் வீடியோ.!

ஒடிசாவில் நேற்று இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் ஏற்பட்ட சேதங்களை காட்டும் டிரோன் வீடியோ வெளியாகியுள்ளது.
ஒடிசாவில் நேற்று இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்களும் மோதி பெரும் விபத்துக்குள்ளானதில், 238 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று ஷாலிமார்- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதியதில் ரயில்கள் பெரும் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட டிரோன் வீடியோ ANI செய்தியில் வெளியாகியுள்ளது. இதில் மூன்று ரயில்கள் மோதிய இடத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து வீடியோ காட்டுகிறது. மேலும் காயமடைந்தவர்களை மீட்கவும், சிகிச்சை அளிக்கவும் இந்திய ராணுவம் தற்போது களமிறங்கியுள்ளது. ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்புப்பணி சேவைகளுடன் ராணுவ மருத்துவக்குழுக்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
#WATCH | Aerial visuals from ANI’s drone camera show the extent of damage at the spot of the #BalasoreTrainAccident in Odisha. pic.twitter.com/8rf5E6qbQV
— ANI (@ANI) June 3, 2023