ஒடிசா ரயில் விபத்து : ரத்தம் கொடுக்க மருத்துவமனைகளில் குவிந்த உள்ளூர் இளைஞர்கள்.!

விபத்தில் சிகிச்சை பெற்று வருவபவர்களுக்கு உள்ளூர் இளைஞர்கள் ரத்ததானம் அளிக்க அதிகளவில் முன்வந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 238 பேர் உயிரிழந்ததாகதகவல்கள் வெளியாகியுள்ளன. 900க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விபத்தில் சிக்கியவர்கள் பாலசோர் மாவட்டத்திற்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், படுகாயமடைந்தவர்களுக்கு ரத்தம் தேவைப்படும் என்பதால் உள்ளூர் இளைஞர்கள் அதிக அளவில் சுற்றுப்புறத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்தனர். தன்னார்வலர்களிடம் இருந்து ரத்த பரிசோதனை செய்து அவர்களிடம் இருந்து ரத்ததானம் பெறப்பட்டு வருகிறது.
விபத்தில் சிக்கியவர்கள் உயிரை காப்பாற்ற ரத்ததானம் கொடுக்க முன்வந்துள்ள தன்னார்வலர்களுக்கு பாராட்டுக்களை இணையத்தில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.