டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

ஒடிசா மாநிலத்தில் விபத்து நடந்த இடத்தை பார்வையிடுவதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
ஒடிசா மாநிலம் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தை அடுத்து பிரதமர் மோடி, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள அழைப்பு விடுத்த நிலையில், அதன்படி டெல்லியில் பிரதமர் மோடி, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் உயரதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, மீட்பு பணி, நிவாரணம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும், ரயில் விபத்து குறித்த வீடியோ காட்சி மூலம் விளக்கப்பட்டது. இந்த நிலையில், ரயில் விபத்து நிகழ்ந்த ஒடிசா மாநிலத்திற்கு டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி. அதன்படி, ஒடிசா பால்சோரில் விபத்து இடத்தில் மீட்பு பார்வையிடுகிறர் பிரதமர் மோடி. இதன்பின், விபத்தில் காயமடைந்து கட்டக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.