மனிதாபிமானத்திற்கு உயிரூட்டியிருக்கும் ஒடிசா மக்களின் செயல் மெய்சிலிர்க்கச்செய்கிறது! – வானதி சீனிவாசன்

காலத்தார் செய்த நல்லுதவிக்கு, தலை வணங்குகிறேன் என வானதி சீனிவாசன் ட்வீட்.

vanathi sinivasan

காலத்தார் செய்த நல்லுதவிக்கு, தலை வணங்குகிறேன் என வானதி சீனிவாசன் ட்வீட்.

ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர்  800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். மேலும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இரத்தம் வழங்குவதற்காக, ஒடிஸாவை சேர்ந்த இளைஞர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இதுவரை 500-க்கும் அதிகமான யூனிட் இரத்தம் இலைகனர்கள் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து வானத்து சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்டு, மருத்துவமனைகளில் சேர்த்து , ரத்தம் தேவை படுவோருக்கு ரத்ததானம் வழங்கி பெருந்துயரான காலத்தில் பேருதவி செய்து மனிதாபிமானத்திற்கு உயிரூட்டியிருக்கும் ஒடிசா மக்களின் செயல் மெய்சிலிர்க்கச்செய்கிறது! காலத்தார் செய்த நல்லுதவிக்கு, தலை வணங்குகிறேன்!’ என பதிவிட்டுள்ளார்.

unknown node