இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?

Washington Sundar

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரின் டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருடைய கணக்கில் இருந்து சம்பந்தம் இல்லாமல் ட்வீட்கள் பதிவிடபட்டுள்ளதால் அவருடைய கணக்கு ஹேக்செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும்,  ஒரு பயனர் ட்விட்டரில் சுந்தரிடம் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என்று கேட்க, அதற்கு ‘இல்லை’ என்று பதில் வந்தது. எனவே உண்மையில் வாஷிங்டன் சுந்தரின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா..? என்பதை அவரே விளக்கம் கொடுத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் வீரர்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு  இந்திய அணியின் ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியாவின் டிவிட்டர் கணக்கு ஏற்கனவே முடக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது வாஷிங்டன் சுந்தரின் டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் முடிவடைந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் , தொடை காயம் காரணமாக முழுப் போட்டியிலும் அவரால் விளையாடமுடியவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்