ஒடிசா ரயில் விபத்து : காங்கிரஸ் கூறுவது தவறானது.! – இந்தியன் ரயில்வே உடனடி பதில்.!

Odisha train accident

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து டிக்கெட் ரத்து அதிகரிக்கப்படுவதாக காங்கிரஸ் கூறுவது தவறானது என இந்தியன் ரயில்வே பதில் கூறியுள்ளது. 

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியின் நடந்த ரயில் விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ அதிகாரிகள் தங்கள் விசாரணையை துவங்கி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சியினர் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி அண்மையில், ரயில் விபத்து தொடர்பாக மக்கள் ரயிலில் பயணிக்க பயப்படுகிறார்கள். கடந்த காலங்களில் இதுபோன்ற ரயில் விபத்து நடந்ததில்லை. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் வேதனைக்கு உட்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கு பிறகு ஆயிரக்கணக்கானோர் தங்களது டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளனர் என குறிப்பிட்டு தங்கள் டிவிட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை காங்கிரஸ் தலைமை பதிவிட்டு இருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தியன் ரயில்வேயின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து, காங்கிரஸ் கூறும் செய்தி தவறானது. டிக்கெட் ரத்து அதிகரிக்கவில்லை. மாறாக கடந்த 1ஆம் தேதி டிக்கெட் ரத்தானது இந்தியன் ரயில்வேயில் 7.7 லட்சமாக இருந்தது. கடந்த 3ஆம் தேதி டிக்கெட் ரத்தானது 7.5 லட்சமாக குறைந்துள்ளது என குறிப்பிட்டு இந்தியன் ரயில்வே பதில் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்