கல்யாணம் எப்போது.? அம்மா கேட்ட கேள்விக்கு ஜெய் பீம் மணிகண்டன் சூசக பதில்…

நடிகர் மணிகண்டன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘காலா’ திரைப்படைத்தில் நடித்து ரசிகர்களின் கண்களில் ஒரு பார்வை மேலே தென்பட்டார். பின்னர், ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம், மிகவும் பிரபலமான நடிகர் மணிகண்டன் அடுத்ததாக விநாயக் சந்திரசேகரன் என்பவர் இயக்கத்தில் “குட்நைட்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில், ஒவ்வொரு நேர்காணல்களிலும் நடிகர் மணிகண்டனிடம் நீங்க எப்பதான் கல்யாணம் பண்ணிப்பீங்க என்று கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. இந்த கேள்வியை மணிகண்டனின் அம்மா தான் அந்த நேர்காணல்களின் தொகுப்பாளரிடம் கேட்க சொல்கிறார். அந்த வகையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதே கேள்வி கெடக்கப்பட்டது.

உடனே இந்த கேள்வி கேட்டதும் அதற்கு உடனே எங்க அம்மா தானே இந்த கேள்வியை கேட்க சொன்னாங்க அப்படின்னு மணிகண்டனும் சொல்லி விடுவார். தொகுப்பாளர் அதற்கு இது ஒரு ஜென்ரலான கேள்வி தானே அப்படின்னு சொல்லிட்டு கேட்க… அதற்கு பதில் அளித்த மணிகண்டன், எனக்கு அதை பத்தின ஐடியாவே இப்போதைக்கு இல்லை என்று கூறுகிறார். அதாவது, இந்த கேள்வியை ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த துணை நடிகர் ரமேஷ் திலக் தான் கேட்கிறார்.

மணிகண்டன் இது பற்றி மேலும் பேசுகையில், ரமேஷ் திலக்கிடம் நீங்க எப்படி லவ் பண்ணி மேரேஜ் பண்ணிங்களோ, அதாவது அந்த பொண்ணு வந்து உங்களை தேடி வந்ததால நீங்க கல்யாணம் பண்ணி, இப்ப சந்தோஷமா இருக்கீங்க… அதுபோல் எனக்கு எந்த காதலும் இல்லை, லவ் பண்ற ஐடியாவும் இல்லை.
எனக்கு சினிமா துறை சார்ந்த நடிப்பில் கவனம் செலுத்துவதால், கல்யாணம் பற்றிய ஐடியாவை இப்போதைக்கு இல்லை என்று கூறினார். அதற்கான நேரமும் ஐடியாவும் வரும்போது கல்யாணம் பண்ண நான் ரெடி என்று பதில் அளிக்க… ரமேஷ் திலக் அம்மா இது உங்க பையனோட அன்சர் என்று கூறினார்.