நான் அவரை காதலிக்கிறேன்…குட் நியூஸ் சொன்ன தமன்னா..குவியும் வாழ்த்துக்கள்.!!

நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவைக் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், தற்போது விஜய் வர்மாவை தமன்னா காதலிப்பதாக மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய தமன்னா “நான் ஒரு நடிகருடன் சேர்ந்து நடிப்பதாலேயே அவர்கள்மீது காதல் வரும் என்று நான் நினைக்கவில்லை.

இதுவரை நான் எத்தனையோ நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். எனவே, அவர்களில் ஒருவர் மீது காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் ஏதாவது ஒன்று பிடித்து இருக்க வேண்டும். அவரிடம் எதையாவது உணர்ந்தால் அது நிச்சயம் என்னுடைய தனிப்பட்ட விஷயம்.

நீங்கள் உங்களுடைய வாழ்கை துணையை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், அந்த நபரின் புரிதலுக்கு உதவும் பல விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நான் ஒரு விஷயம் கூட செய்யாமலேயே அந்த உலகத்தைப் புரிந்துகொண்ட ஒரு நபர் இங்கே இருக்கிறார்.

இப்போது என்னை அவர் தான் மகிழ்ச்சியாக பார்த்து கொள்கிறார். எனக்கும் விஜய் வர்மாவுக்கும் இடையே ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்திலே காதல் வந்துவிட்டது” என மனம் திறந்து பேசியுள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குட் நியூஸ் சொன்ன தமன்னாவுக்கு அவருடைய ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் நடிகை தமன்னா தற்போது தமிழில் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹிந்தியில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் நடித்துமுடித்துள்ளார். இதில் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்.., 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவிப்பு.!
July 25, 2025
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு.!
July 25, 2025
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!
July 24, 2025
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025