தமிழகத்தில் வரும் 29-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் – அரசு தலைமை ஹாஜி

இஸ்லாமியர்களின் ஈகை திரு நாளான பக்ரீத் பண்டிகை இந்த ஆண்டில் ஜூன் -29 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிப்பு.
இஸ்லாமியர்களின் ஈகை திரு நாளான பக்ரீத் பண்டிகை இந்த ஆண்டில் ஜூன் -29 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாஹுத்தின் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
19ஆம் தேதியான இன்று துல் ஹஜ் பிறை நாகூரில் காணப்பட்டது. அதன் காரணமாக ஜூன் 20ஆம் தேதியான நாளை துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் பக்ரீத் தினத்தை முன்னிட்டு ஜூன் 29ஆம் தேதி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.