சாய் சுதர்சன், சுரேஷ் குமார் அபாரம்..! கோவை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய LKK vs CSG போட்டியில், கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய சேப்பாக் அணியில், ஹரிஷ் குமார் மற்றும் சசிதேவ் பொறுப்பாக விளையாடிய நிலையில், சேப்பாக் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 127 ரன்கள் என்ற வெற்றி இலக்கில் கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது.
இதில் தொடக்க ஆட்டக்காரராக முதலில் களமிறங்கிய சச்சின் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், சுரேஷ் குமார் அதிரடியாக விளையாடினார். அதன்பின் களமிறங்கிய சாய் சுதர்சன், சுரேஷ் குமாருடன் இணைந்து நிதானமாக விளையாடிய நிலையில், அரைசதத்தை தவறவிட்டு சுரேஷ் குமார் 47 ரன்களுடன் வெளியேறினார்.
சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தார். முடிவில், கோவை அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து, சேப்பாக் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதில் அதிகப்பட்சமாக சாய் சுதர்சன் 64* ரன்களும், சுரேஷ் குமார் 47 ரன்களும் குவித்தனர்.