நிதிஷ் குமார் அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ்… பீகார் முன்னாள் முதல்வர்.!

ஹெச்ஏஎம் தலைவர் ஜிதன் ராம் மஞ்சி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளார்.
பீகார் முன்னாள் முதல்வரும் HAM கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி, முதல்வர் நிதிஷ் குமாரின் JD(U) ஐக்கிய ஜனதா தளத்துக்கு அளித்துவந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளார். இது குறித்து மஞ்சிஆதரவை வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை, வழங்குவதற்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக மஞ்சியின் மகன் சந்தோஷ் சுமன் தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜக தலைமையிலான கூட்டணியால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அழைப்பை பரிசீலனை செய்ய டெல்லி செல்லவுள்ளதாகவும் சுமன் தெரிவித்தார். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு, HAM கட்சி 4 எம்.எல்.ஏ க்களுடன் கடந்த ஆண்டு மகாத்பந்தனில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
243 பேர் கொண்ட சட்டசபையில் ஆளும் கூட்டணிக்கு 160 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் JD(U), RJD மற்றும் காங்கிரஸ் தவிர மூன்று இடதுசாரிக் கட்சிகளும் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவளித்து வருகின்றன.