தொடரும் கனமழை.! திருப்பத்தூர், திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

கனமழை காரணமாக திருப்பதூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று முன்தினம் துவங்கிய மழை இன்னும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வருகிறது. இன்னும் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இருந்தும், இன்று காலை மழையின் அளவு குறைந்து காணப்பட்டதால், நேற்று விடுமுறை அளிக்கப்ட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது திருவண்ணமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து வருவதால் மேற்கண்ட 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.