முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சிலை… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!!

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்துவதில் உறுதியாக இருந்த புரட்சித் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர் சமூக நீதிக்காக அச்சமின்றி போராடினார், இடஒதுக்கீடு நமது உரிமை என்று உறுதியளிக்க அனைவரையும் ஊக்கப்படுத்தினார் என முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது, முன்னாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களுக்கு மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான வெளியான அறிவிப்பில் ” முன்னாள் பிரதமர், சமூக நீதிக் காவலர் பிற்படுத்தப்பட்ட மக்களின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த திரு வி.பி.சிங் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, சென்னையில் அவரது முழு உருவ கம்பிரச் சிலை அமைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 20,4-2023 அன்று சட்டமன்றப் பேரவை விதி-110 ன் கீழ் அறிவித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களுக்கு மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/ZQaSrcS9mA
— TN DIPR (@TNDIPRNEWS) June 25, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025