அடக்கடவுளே…மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு..டெல்லியில் நடந்த பெரும் சோகம்.!!

Delhi Woman Dies In Freak Electrocution

டெல்லியில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, புதுடெல்லி ரயில் நிலையத்தில், தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் இன்று உயிரிழந்தார். கிழக்கு டெல்லியில் உள்ள ப்ரீத் விஹாரில் வசிக்கும் சாக்ஷி அஹுஜா, நடைபாதையில் எற மின்கம்பத்தைப் பிடித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மின் கம்பியை தொட்டநிலையில், சாக்ஷி அஹுஜா  மயக்கமடைந்தார். பிறகு உடனடியாக காயமடைந்த சாக்ஷி அஹுஜாவின் சகோதரி மத்வி சோப்ரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவரின் சகோதரி, மாத்வி சோப்ரா, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியத்தைக் குற்றம் சாட்டி புகார் அளித்தார், அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்