பாஜகவின் கேவலமான முகம் இதுதான்..! சிறுநீர் கழித்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி..!

Rahul Gandhi

பாஜக ஆட்சியில் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள குப்ரி கிராமத்தில் பாஜக தலைவர் பிரவேஷ் சுக்லா, போதையில் பழங்குடியினரின் முகத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிலையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து காவல்துறையினர் பிரவேஷ் சுக்லாவை கைது செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மீது காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவர் ஒருவரின் மனிதாபிமானமற்ற செயலால் ஒட்டுமொத்த மனித குலமே அவமானமடைந்துள்ளது. பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீதான பாஜகவின் வெறுப்பின் கேவலமான முகமும் உண்மையான குணமும் இதுதான் என்று ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், சுக்லாவின் மனைவி, நான் சட்டத்தின் கீழ் நிற்பதாகவும், தவறுகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். அவர் என் கணவராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் தண்டனை வழங்கப்பட வேண்டும். என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்