தென்காசி தேர்தல் – தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு!

தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தொடர்ந்த வழக்கில், 10 நாட்களில் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுதாரருக்கு வழக்கு செலவாக ரூ.10,000 வழங்க தேர்தல் அதிகாரிக்கு நீதிபதி ஆணையிட்டார். தென்காசி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.