ஆளுநர்கள் அரசியல்வாதிகள் கிடையாது..! அரசியல் பேசக்கூடாது..! – அண்ணாமலை

தினம் தினம் ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து பேசினால் ஆளுநர் பதவிக்கு மாண்பில்லாமல் போய்விடும் என அண்ணாமலை பேட்டி.
விழுப்புரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அவர்களின் செய்தியாளர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது; இதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
ஆளுநர் அவரின் கடமையை மட்டும்தான் செய்யவேண்டும்; தினம் தினம் ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து பேசினால் ஆளுநர் பதவிக்கு மாண்பில்லாமல்
போய்விடும். ஆளுநர் அரசை விமர்சிப்பது மரபல்ல, பத்திரிகையாளர்களை சந்தித்து அரசை விமர்சிக்க ஆளுநர்கள் அரசியல்வாதிகள் கிடையாது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பதில் சொல்ல ஆளுநர் அரசியல்வாதி அல்ல; ஆளுநர் செய்தியாரை சந்திப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.