புலம்பெயர் தொழிலாளர்கள் கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முடிவு!

தமிழ்நாட்டில் வெளிமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு முடிவு.
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பானது இடம்பெயர்வு நடைமுறையைப் புரிந்து கொள்ளவும், புலம்பெயர்ந்தோரின் வேலை மற்றும் வாழ்க்கை தரத்தினை ஆய்வு செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுமான தொழிலாளர்கள் குறித்து 38 மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 7 மாதங்களுக்குள் தரவுகளை சேகரித்து கொள்கை பரிந்துரைகள் தமிழக அரசுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.