அமுல் பாலில் யூரியா இருப்பதாக கூறிய நபர்..! அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு..!

FIR registered

அமல் பாலில் யூரியா இருப்பதாக கூறி வீடியோ மூலம் அவதூறு பரப்பிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கும் லக்ஷ்மிகாந்த் பர்மர் என்ற நபர், பிரபல பால் நிறுவனமான அமுல், தயாரிக்கும் பாலில் விவாசாயத்திற்கு உரமாக பயன்படுத்தப்படும் யூரியா இருப்பதாக பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெயிட்டுள்ளார்.

இதனையடுத்து, குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (ஜிசிஎம்எம்எஃப்) உற்பத்தி பிரிவான அமுல்பெட் (Amulfed) நிறுவனத்தில் மூத்த விற்பனை மேலாளராக பணியாற்றும் அங்கித் பரிக் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது வரை, யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அந்த புகாரில், அமுல் தயாரிக்கும் பாக்கெட் பாலில் யூரியா இருப்பதாக தவறான தகவல்கள் மூலம், பேஸ்புக் வீடியோ பதிவிட்டு அமுல் பிராண்டை அவதூறாகப் பேசியதாகவும், அமுல் பிராண்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதும், ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவதுமே இந்த வீடியோவின் முதன்மை நோக்கமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்