கொல மாஸ்.! மிரட்டல் லுக்கில் தனுஷ்…பூஜையுடன் தொடங்கிய 50-வது படத்தின் படப்பிடிப்பு.!!

நடிகர் தனுஷின் 50-வது திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்த திரைப்படத்தை தனுஷ் இயக்குவதாகவும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது எனவும் தனுஷ் போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளார்.
#D50 #DD2 Shoot begins @sunpictures Om Namashivaya pic.twitter.com/DP1g3rO1y5
— Dhanush (@dhanushkraja) July 5, 2023
போஸ்டரில் நடிகர் தனுஷ் மொட்டை தலையுடன் மிகவும் கொடூரமான லுக்கில் இருப்பதால் இந்த திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்துக் கொண்டிருந்தார்.
அதற்கான புகைப்படங்களும் கூட சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது எதற்காக..? என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், தற்போது அவர் தன்னுடைய 50-வது திரைப்படத்திற்காக தான் மொட்டை அடித்து நடிக்க உள்ளார் என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி அடைந்த நிலையில், இந்த திரைப்படமும் வெற்றி பெற வேண்டும் என அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் இந்த திரைப்படத்தில் நடிக்கவுள்ள பிரபலங்கள் மற்றும் இசையமைப்பாளர் யார் என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.