தெலுங்கானாவில் பரபரப்பு.! ஓடும் ரயிலில் தீ விபத்து.!

தெலுங்கானாவிலஓடும் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கத்தில் இருக்கும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானாவில், ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலானது, பொம்மைப்பள்ளி மற்றும் பகிடிப்பள்ளி ஊர்களுக்கு இடையில் சென்று கொண்டு இருக்கும் போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அந்த ரயிலின் S4, S5, S6 ஆகிய பயணிகள் கோச்சில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்ற்னர்.