அரசியலாக்க வேண்டாம்..! டிஐஜி மரணத்திற்கு பணிசுமையோ, குடும்ப பிரச்சனையோ இல்லை – ஏடிஜிபி அருண்

பணி சூழலில் எந்த பிரச்சனையும் இல்லாத டிஏஜி விஜயகுமார் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் என ஏடிஜிபி அருண் பேட்டி.
இன்று அதிகாலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரியின் தற்கொலை சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தற்போது அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தற்போது உடற்கூறாய்வு நிறைவடைந்துள்ளது. ஆயின் நிலையில், விஜயகுமார் உடலுக்கு ஏடிஜிபி அருண் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏடிஜிபி அருண், விஜயகுமாருக்கு பணிசுமையோ குடும்பப் பிரச்சினையோ எதுவும் இல்லை. மன அழுத்தத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். விஜயகுமார் மரணத்தை அரசியலாக்க தேவையில்லை. பணி சூழலில் எந்த பிரச்சனையும் இல்லாத டிஏஜி விஜயகுமார் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் என தெரிவித்துள்ளார்.