ஆளுநருக்கு அனுப்பிய கடிதங்கள்.! தமிழக அரசு வெளியிட்ட ஒப்புகை சீட்டு ஆவணங்கள்.!

Governor RN Ravi - Minster Ragupathi

ஆளுநருக்கு அனுப்பிய கடிதங்களுக்கான ஒப்புகை சீட்டு ஆவணங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றசாட்டுகள் குறித்த விசாரணை நடத்த தமிழக அரசு சட்டமசோதா தாக்கல் செய்து, அதற்கான இசைவாணை பெறுவதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கோப்புகள் அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது. ஆனால், கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு வரவில்லை என ஆளுநர் கடிதம் எழுதி இருந்தார்.

இதுகுறித்து சட்டத்துறைஅமைச்சர் ரகுபதி நேற்று பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் 2022 செப்டம்பரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்பான விசாரணை குறித்தும், கடந்த மே மாதம் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விசாரணை தொடர்பாகவும் இசைவாணை பெறுவதற்கு கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதற்கான ஒப்புதல் சீட்டு பெறப்பட்டது என அமைச்சர் ரகுபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

Governor Office acknowledgement
Governor Office Acknowledgement [File Image]

இந்த கடிதத்தை அடுத்து, ஆளுநர் மாளிகைக்கு இசைவாணை பெறுவதற்கான கோப்புகள் அனுப்பிவைக்கப்பட்டு அதற்கு ஆளுநர் மாளிகை அளித்த ஒப்புகை சீட்டுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்