பள்ளி, சமுதாய நல கூடங்களில் உரிமை தொகை விண்ணப்பம் – சென்னை ஆணையர்

Radhakrishnan

500 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு தொடர் ஆலோசனைகள் நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இன்று மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்கள் அமைப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது.

அதன்படி, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை முகாம் பணிகளில் ஈடுபடுத்த பரிந்துரை செய்து உத்தரவிடப்பட்டது. ஒவ்வொரு நியாய விலைக் கடைக்கும் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள். ரேஷன் கடை முகாம்களில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தை பெற பணியமர்த்தப்படுவார்கள். ரேஷன் கடைகளில் இருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கும் தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்க சிறப்பு பணி அலுவலர் இலம்பகவத் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பள்ளி, சமுதாய நலக்கூடங்களில் சிறப்பு முகாம் நடத்தி மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் தரப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 500 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்