மேற்கு வங்காள ராஜ்யசபா தேர்தல்.. வேட்பாளர்களைஅறிவித்தது திரிணாமுல் காங்கிரஸ்.!

மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை, திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) அறிவித்துள்ளது.

Mamata bannerjee

மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை, திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) அறிவித்துள்ளது.

ராஜ்யசபா தேர்தல் வரும் ஜூலை 24இல் கோவா, மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெற இருப்பதை முன்னிட்டு, மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. அறிவித்துள்ள 6 வேட்பாளர்களில் 3 பேர் புதிய முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node

பெரும்பான்மையாக திரிணாமுல் காங்கிரஸ் முஸ்லிம்கள் மத்தியிலும் வடக்கு வங்காளத்திலும் அதன் வலிமையை நிரூபிக்க மூன்று புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. மேல்சபை எம்.பி.க்களான டெரெக் ஓ பிரையன் (டிஎம்சியின் ராஜ்யசபா தலைவர்), டோலா சென் மற்றும் சுகேந்து சேகர் ரே ஆகிய மூன்று பேரும் மீண்டும் வேட்பாளராக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் டிஎம்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே, அலிபுர்துவார் மாவட்டத் தலைவர் பிரகாஷ் சிக் பராய்க் மற்றும் வங்காள சமஸ்கிருதி மஞ்சா என்ற சிவில் சமூக அமைப்பின் தலைவர் சமிருல் இஸ்லாம் ஆகியோர் ராஜ்யசபாவில் புதிய முகங்களாக டிஎம்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.