நடிகர் விஜயின் அரசியல் நகர்வு.? 234 தொகுதி நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை.!

Actor Vijay

இன்று 234 தொகுதிகளிலும் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளை கூட்டாக சந்திக்கிறார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் இன்று பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அம்பேத்கர் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் 234 தொகுதிகளிலும் தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவை மூலம் பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

அடுத்ததாக அண்மையில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த  முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி விஜய் கௌரவித்தார்.

இவ்வாறு அரசியல் பயணம் நோக்கி தனது அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொள்ளும் நடிகர் விஜய் இன்று பனையூரில் தனது அலுவலகத்தில் 234 தொகுதிகளில் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளையும் கூட்டாக சந்திக்க உள்ளார். இதில் தங்களது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசிப்பார் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்