வேங்கைவயல் விவகாரம் – 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அவர்களின் பெற்றோர் சம்மதம்…!

DNA PVV

வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அவர்களின் பெற்றோர் சம்மதம்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வழக்கை  சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இத்தனை தொடர்ந்து, புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இதுவரை 21 நபர்களின் இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மலம் சேகரிக்கப்பட்டு சந்தேகப்பட்டு விசாரிக்கப்பட்ட 119 நபர்களின் மரபணு பரிசோதனைக்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டது. இந்த நிலையில், மேலும் 4 சிறார்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதிக்கோரி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு அளித்து இருந்தது.

இதனை தொடர்ந்து, 4 சிறார்களும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இந்த நிலையில், 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அவர்களின் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசாருக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வரும் 17ம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையை 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்