டெல்லியில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு..!

டெல்லியில் முகுந்த்புர் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு
டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. சாலையில் வெள்ளம் ஒரு பக்கம் புரண்டோட, போக்குவரத்து நெரிசலும் இடையூறாக காணப்படுகிறது. இந்த நிலையில் யமுனை நதி தலைநகருக்குள் புகுந்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், கனமழையால் முகுந்த்புர் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்களின் உடலையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.