தென்கொரியாவில் சூழ்ந்த வெள்ளம்..,24 பேர் பலி, 10 மாயம்.!

தென்கொரியாவில் வெள்ள பாதிப்பால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேரை காணவில்லை. அங்கு 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜூலை 9 முதல் தென் கொரியாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், 1000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்கு உதவுமாறு தென்கொரிய ராணுவத்தை அந்நாட்டு பிரதமர் ஹான் டக் கேட்டு கொண்டுள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் நாளை அதிக கனமழை பெய்யும் என்று கொரிய வானிலை நிர்வாகம் கணித்துள்ளது. மேலும், லச்சரிவுகள், ரயில் பாதையில் வெள்ளம் மற்றும் பாறைகள் இருக்கும் என்பதால், அனைத்து ரயில்களை நிறுத்துவதாக கொரியா ரெயில்ரோட் அறிவித்துள்ளது.